Type Here to Get Search Results !

பூமியில் விண்கற்கள் தாக்கினால் எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியும் ஆனால் மற்ற கிரகத்தில் இந்நிகழ்வு எப்படி இருக்கும்?

 மனிதன் எப்போது முதல் வானத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தானோ அப்போது முதலே நமது பூமியைத் தாண்டி நிறைய விஷயங்களை கண்டு பிடித்துக்கொண்டே தான் வருகிறான். விண்வெளியை பற்றி நாம் தினமும் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டே தான் வருகிறோம், அதன் அதிசயங்களும் மற்றும் அற்புதங்களும் இது போன்ற விஷயங்களை நாம் தெரிந்து கொள்வதன் மூலம் நமது பூமியைத் தாண்டி இவ்வளவு அழகான விஷயங்கள் உள்ளதா என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.



தற்பொழுது பிரேசிலை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புதிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளனர் அது என்னவென்றால் நமது பூமியில் ஏதோ ஒரு பாறை அல்லது விண்கல் நமது பூமியை தாக்கும் பொழுது அது எப்படி இருக்கும் என்பதை நாம் சில வீடியோக்கள் மூலம் பார்த்திருப்போம். ஆனால் தற்போது வெளியாகி உள்ள வீடியோவை நீங்கள் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். நமது பூமியை விட்டு வேறு ஒரு கிரகத்தில் இந்த மாதிரியான நிகழ்வு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பதை தற்போது வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.


Jupiter struck by a large space rock


இந்த நிகழ்வு எப்பொழுது படம் பிடிக்கப்பட்டது?

பிரேசிலை சேர்ந்த பெரேரா விஞ்ஞானியான  அவர் செப்டம்பர் 13 மாலை அன்று வியாழன் கோளை தாக்கியதாக கூறப்படுகிறது. 10 அங்குல நியூட்டோனியன் தொலைநோக்கி பயன்படுத்தி வானில் வியாழன் கிரகத்தை பார்த்த பொழுது இந்த அரியவகை நிகழ்வு தென் பட்டதாகவும் இதன் அளவு கிட்டத்தட்ட ஒரு 100 மீட்டர் கொண்டதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 


இதுமட்டுமின்றி இந்த இந்த நிகழ்வை சரியான சூழ்நிலை இல்லாத காரணத்தினால் இன்னும் தெளிவாக பார்க்க முடியவில்லை என்றும், வானத்தில் மேகம் ஓட்டங்கள் அதிகமாக இருந்ததால் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் தெளிவான பார்வையில் கிடைக்காத பட்சத்தில் இவர் சரியான நேரத்தில் இந்த நிகழ்வை பதிவு செய்து உள்ளார். 22:39:30 UT இந்த நேரத்தில் தனது தொலை நோக்கி மூலம் ஒரு ஃப்ளாஷ் லைட் போல மின்னும் காட்சியை வியாழன் கிரகத்தில் பார்த்ததல் அந்த படத்தை பதிவு செய்ததாகவும், "Detect" தெளிவாக தெரியும் வகையில் தயாரித்து உள்ளதாக கூறுகிறார்.


இந்த நிகழ்வை தான் ஒருவன் மட்டும் தன் பார்த்திருந்தால் இதனை யாரும் நம்ப மாட்டார்கள் ஆனால் இந்த வகையான நிகழ்வை இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்சில் உள்ள வானியலாளர்களால் அந்த நேரத்தில் இந்த நிகழ்வை ஏற்பட்டது என்றும் எனவே இது உண்மையானது என்றும் கூறப்படுகிறது. 


அடுத்த நாள் ESA space agencies ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதனை அடுத்து இந்த மாதிரியான நிகழ்வு ஒன்பதாவது முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், 1994 இல் ஒரு தொழில்முறை விஞ்ஞானிகள் இந்த மாதிரியான நிகழ்வு பதிவு செய்யப்பட்டது. நமது சூரியக் குடும்பத்திலேயே வியாழன் கிரகம் தான் பெரிய கோளாகவும் இருக்கிறது இதனாலேயே நிறைய விண்கற்கள் மற்றும் பாறைகளால் அடிக்கடி இந்த மாதிரி இந்த நிகழ்வு ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.

choose your reaction for this post:


இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கமெண்டில் உங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

 இது போன்ற செய்திகளை மேலும் அறிந்து கொள்ள எங்களின் யூடியூப் வீடியோக்கள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூ போன்றவற்றில் எங்களைப் பின்தொடரவும்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.